
கொடைக்கானல் மலைப்பகுதியில் கால்களில் அடையாள குறியீடுகளுடன் குருவிகள் வலம் வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதி, மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் மிக முக்கியமான இடமாக உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில், எங்கும் இல்லாத நில அமைப்புகளாக அடையாளம் காணப்படுகிறது.
இவை, வெப்ப மண்டல காடுகள் கொண்ட கீழ்மலைப் பகுதிகள், அனுபவிக்கத்தக்க குளிரான காலநிலை கொண்ட நடுமலைப் பகுதிகள், மற்றும் அதிக குளிர் தரும் பகுதிகளான மேல்மலைப் பகுதிகள் என, மூன்று படி நிலைகளாக பகுத்துள்ள இந்த மலைப்பகுதிகள், வன உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாகவும் உள்ளது.

குறிப்பாக இம்மலைப் பகுதிகளில் அதிக அளவிலான பறவை இனங்கள், ஆண்டு முழுவதும் வலம் வருவது வழக்கம். அதிலும் பூச்சி பிடிக்கும் வகைகளை சார்ந்த, எண்ணற்ற குருவி வகைகளை கொடைக்கானல் மலைப்பகுதிகளில் அதிகமாக காண முடியும்.
அவற்றில் அண்மைக்காலமாக, கால்களில் அடையாள குறியீடு வளையம் மாட்டிய குருவிகள் மலைப்பகுதிகளில் வலம்வரத் துவங்கியுள்ளன. இந்த குருவிகள் எங்கிருந்து வருகின்றன, எந்த பகுதியில் இதற்கு அடையாள குறியீடுகள் இணைக்கப்பட்டன, என்ற தகவல்கள் குறித்து, கொடைக்கான் வனச்சரகர் சிவகுமாரிடம் கேட்டபோது... இது குறித்து ஆய்வுகள் மற்றும் தகவல்களை திரட்டி வருவதாகவும், விரைவில் கண்டறியப்படும் என்று தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News