பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில் முறைகேடு செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் 52 கல்லூரிகளின் முதல்வர்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
2011ஆம் ஆண்டு முதல் 2014 வரையில் எஸ்.சி, எஸ்.டி பிரிவைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில், 17 கோடியே 36 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் பாலிடெக்னிக், கலை அறிவியல், பொறியியல், மருத்துவம் என 52 கல்லூரிகளில் முறைகேடு நடந்திருப்பதாக தணிக்கைத்துறை அறிக்கை அளித்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட 52 கல்லூரிகளின் முதல்வர்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். பட்டியலின மாணவர்களுக்கான உதவித்தொகை முறைகேடு தொடர்பாக ஆதி திராவிடர் நலத்துறையை சேர்ந்த பெயர் குறிப்பிடாத அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
'மு.க.ஸ்டாலின் வலிமையான முதலமைச்சர்' - ஆளுநர் ஆர்.என். ரவி புகழாரம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News