
நீலகிரி மாவட்டத்தில் ராணுவ ஹெலிகாப்டர் திடீரென விழுந்து விபத்துக்குள்ளானது.
குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் ராணுவ ஹெலிகாப்டர் வானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது. கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூர் வெலிங்டன் மையத்திற்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
முக்கிய ராணுவ உயரதிகாரிகள் குறைந்தது 14 பேர் இந்த விமானத்தில் பயணித்ததாகக் கூறப்படுகிறது. கீழே விழுந்ததில் ஹெலிகாப்டர் நொறுங்கி தீப்பிடித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த 2 ராணுவ அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் அம்ரித் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். மேகமூட்டம் அதிகமாக இருந்ததால் விபத்து நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. ராணுவம் தரப்பிலிருந்து விரிவான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News