பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு முறைப்படி நீட்டிக்கும் என தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதாவின் மாவட்டத் தேர்தல் பணிகள் குறித்து, தமிழக பாரதிய ஜனதா பொறுப்பாளர் சி.டி.ரவி, சுதாகர் ரெட்டி உள்ளிட்டோருடன் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து சி.டி.ரவியுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்திருப்பதாகவும், மத்திய அரசு விவசாயிகள் நலனுக்காக அதனை முறைப்படி நீட்டிக்கும் என்றும் கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News