சிறப்பு ரயில்களை ரெகுலர் ரயில்களாக ஆக்கும் பணி தொடங்கியது - சு.வெங்கடேசன் எம்.பி

சிறப்பு ரயில்களை ரெகுலர் ரயில்களாக ஆக்கும் பணி தொடங்கியது, நீண்ட போராட்டத்திற்குபின் கிடைத்த வெற்றி என சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்திருக்கிறார். 

சு.வெங்கடேசன் எம்.பி இதுபற்றி கூறுகையில், ’’கொரோனா காலத்தில் சிறப்பு ரயில்களாக அறிவிக்கப்பட்டவற்றை சாதாரண ரயில்களாக மாற்றவேண்டும் என்றும், முதியோர் கட்டண சலுகை உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் மீண்டும் வழங்கவேண்டும் எனவும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டோம்.

அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நாளுக்குநாள் கிடைத்து வருகிறது. பொதுப்பெட்டிகள் இணைப்பு உள்ளிட்ட நான் எழுப்பிய பல்வேறு கோரிக்கைகள் ஏற்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கொரோனா காலத்தில் ரயில்கள் அனைத்தும் சிறப்பு ரயில்களாக மாற்றப்பட்டு அதன் கட்டணமும் உயர்த்தப்பட்டிருந்தது. எனவே அதனை மீண்டும் சாதாரண ரயில்களாக மாற்றி, கட்டணத்தினை குறைக்க வேண்டுமென ஒன்றிய அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தி இருந்தேன். அதில் மிக முக்கியமான வெற்றி கிடைத்துள்ளது.

image

சிறப்பு ரயில் வண்டிகளை ரெகுலர் வண்டிகளாக மாற்றுவதற்கு அவற்றின் எண்களை இணையத்தில் பதிவேற்றும் பணி நேற்று இரவு துவங்கியது. இரவு பதினொன்றரை மணி முதல் காலை ஐந்தரை மணிவரை ஆறு மணிநேரம் இந்த பணி நடைபெறும். நவம்பர் 14 & 15 தேதிகளில் தொடங்கிய இந்தப்பணி ஏழு நாட்கள் படிப்படியாக நடைபெறும்.

"கங்கனாவின் பத்மஸ்ரீ விருதை திரும்பப் பெறுங்கள்'' - ஜனாதிபதிக்கு மகளிர் ஆணையம் கடிதம் 

நேற்று இரவு முதல் கட்டமாக 28 வண்டிகளின் எண்களை மாற்ற திட்டமிடப்பட்டது. இந்த ஏழு நாட்களில் ஆறு மணிநேர காலத்தில் பயணிகள் பயணச்சீட்டுகளை பதிவு செய்ய இயலாது. எண்கள் மாற்றப்பட்டு ரெகுலர் வண்டிகளாக ஆக்கப்பட்டபின் வழக்கமான கட்டணமும், முதியோர் சலுகை உட்பட மற்ற சலுகைகளும் நடைமுறைக்கு வரும்’’ என்று கூறியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post