தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ்.பாலபாரதிக்கு சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், சமஸ்கிருதம் என 24 மொழிகளில் சிறந்த படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி, பால புரஸ்கார் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டுக்கான பால புரஸ்கார் விருதுக்கு தமிழகத்தில் இருந்து எழுத்தாளர் எஸ்.பாலபாரதி தெரிவு செய்யப்பட்டார்.
'மரப்பாச்சி சொன்ன ரகசியம்' என்ற நூலை எழுதியதற்காக அவர் இந்த விருதுக்கு தெரிவாகியிருந்தார். இந்நிலையில், ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடந்த விழாவில், பாலபாரதிக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News