பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு முறையில் மாற்றமில்லை; நேரடி எழுத்துத்தேர்வாகவே நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
'தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டும்' என்று தனியார் பொறியியல் கல்லூரிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் தேர்வுகள் நேரடியாகவே நடத்தப்படும் என அண்ணா பல்கலைகழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாகதுணைவேந்தர் வேல்ராஜ், ''கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால், தேர்வுகளை நேரடியாக நடத்துவதே உகந்ததாக இருக்கும்.
ஆன்லைனில் தேர்வுகளை நடத்தினால் மாணவர்களின் திறன் கேள்விக்குறியாகும். B.Arch., கலந்தாய்வில் தேர்வான மாணவர்கள் இன்று முதல் அவரவர் கல்லூரிகளுக்கு சென்று சேர்க்கையை உறுதி செய்து கொள்ளலாம்' என அவர் கூறியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News