மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை-Today is a holiday for district schools and colleges

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் கன மழையால் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்றும் (11.11.2021) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழையின் காரணமாக இன்று (11.11.2021) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

image

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நிலை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (11.11.2021) வியாழக்கிழமை விடுமுறை அளிக்கபடுவதாக என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூடுதலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் அமர்குஷ் வாஹா தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் இன்று (11.11.2021) மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி அறிவித்துள்ளார்.

வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், சேலம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் இன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. திருவண்ணாமலை, கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களிலும் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



Due to the continuous heavy rains in Tamil Nadu, schools and colleges in many districts including Thiruvannamalai and Krishnagiri have been declared closed today.

Due to the continuous heavy rain, only schools in Thiruvannamalai district will be closed today (11.11.2021).

School and colleges in Kanyakumari district will be closed today (11.11.2021) due to heavy rains.

Only all government and private schools in Dharmapuri district will be closed today (11.11.2021) on Thursday, the district administration said.

Krishnagiri: The Krishnagiri district is likely to receive additional rains today.

District administration chief Amarkush Waha said today was a holiday only for schools in Tirupati district.

District Collector Krishnanunni has declared a holiday for schools and colleges in Erode district only today (11.11.2021).

District Collectors in Vellore, Ranipettai, Villupuram, Salem and Kanyakumari districts have announced holidays for schools and colleges today.

Holidays have already been declared for schools and colleges in Chennai, Tiruvallur, Kanchipuram, Chengalpattu, Cuddalore, Nagaon, Tanjore, Thiruvarur and Mayiladuthurai. Holidays are given only to schools in Thiruvannamalai and Coimbatore districts. Holidays have been declared for schools and colleges in Pondicherry and Karaikal districts today.

Post a Comment

Previous Post Next Post