கடலூரில் தக்காளி விலை சற்று குறைந்து கிலோ 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால், வேளாண் நிலங்களில் மழைநீர் புகுந்ததில் பயிர்கள் சேதமடைந்தன. இதனால், விளைப்பொருட்களின் விலை உயர்ந்தது. குறிப்பாக தக்காளியின் விலை கிலோ 150 ரூபாய் வரை விற்கப்பட்டதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதையடுத்து குறைந்த விலையில், தக்காளியை விற்க தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியிருப்பதால், தமிழகத்திலும் அதன் விலை படிப்படியாக குறைய தொடங்கியிருக்கிறது. தற்போது கடலூரில் ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அடுத்து வரும் வாரங்களில், இந்த விலை மேலும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News