
Traffic damage due to stagnant rainwater on highways
திருநெல்வேலியில் இருந்து தென்காசி, பாபநாசம் செல்லும் நெடுஞ்சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி சேரன்மகாதேவி நெடுஞ்சாலையில் சேரன்மகாதேவி ரோட்டில் நெல்லை கால்வாய் மற்றும் அதன் கிளை கால்வாய்கள் செல்கிறது. இங்கு நேற்று (வியாழக்கிழமை) பெய்த தொடர் மழையால் கால்வாய்கள் நிரம்பி நகரத்திற்குள் நீர் புகுந்தது. இடுப்பளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சந்தி விநாயகர் கோவிலில் இருந்து காட்சி மண்டபம் பகுதி வரை செல்லும் சாலை தடை செய்யப்பட்டுள்ளது.

மட்டுமன்றி தொடர் மழையால் காட்சி மண்டபம் அருகே செல்லும் அனைத்து வாகனங்களும் நீரில் மிதந்தபடி சென்றன. பல வாகனங்கள் தண்ணீரில் சிக்கி பழுதடைந்து நின்றன. தொடர்ந்து மழை குறைந்தால் மட்டுமே தண்ணீர் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
Tags:
News