ஜெய்பீம் படத்திற்கு எதிராக ராஜாகண்ணுவின் முதனை கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்-Rajakannu's main villagers protest against the Jaybeam film

ஜெய்பீம் திரைப்படத்திற்கு எதிராக முதனை கிராமத்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த முதனை கிராமத்தை சேர்ந்த ராசா கண்ணுவை கம்மாபுரம் காவல்துறையினர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கை மையமாக வைத்து "ஜெய் பீம்" திரைப்படம் எடுக்கப்பட்டது.

image

இந்தப் படத்தில் அனைத்து சமுதாயத்தினரும் ஒற்றுமையாக வாழும் முதனை கிராமத்தில் சாதிய வன்மத்தோடு ஒரு சாதியை மட்டும் தவறாக காட்சிப்படுத்தி இருப்பதாக கூறி அந்த கிராம மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். படத்தின் தயாரிப்பாளர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post