உலக மீன்வள நாளான இன்று மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தமிழும் அமுதும் போல, கடலும் அலையும் போல்; மீனவர் நலனையும் மீன்பிடித்தொழிலையும் போற்றுவோம். இந்நாளில் அலைகள் போல உழைத்துக்கொண்டிருக்கு மீனவ சமுதாயத்திற்கு மீனவ தின வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
நவம்பர் -21 #உலகமீனவர்தினம்.!!
— Dr.L.Murugan (@Murugan_MoS) November 21, 2021
தமிழும் அமுதும் போல்!! கடலும் அலையும் போல்!! மீனவர் நலனையும்,மீன்பிடித் தொழிலையும் போற்றுவோம்!!இந்நாளில் அலைகள் போல் உழைத்து கொண்டிருக்கும் மீனவ சமுதாயத்திற்கு என் இனிய மீனவ தின வாழ்த்துக்கள்.!!#WorldFisheriesDay pic.twitter.com/eB1CxQ1Mub
தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா. ஆர்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “ மீனவ சகோதர சகோதரிகளுக்கு உலக மீனவர் தின வாழ்த்துகள்” என தெரிவித்திருக்கிறார்
— Anitha Radhakrishnan (@ARROffice) November 21, 2021
இது தொடர்பாக திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி வெளியிட்டுள்ள ட்வீட்டில், “உலக மீன்வள நாளான இன்று, மீனவர்களுக்கு எதிராக ஒன்றிய அரசு கொண்டு வரும் சட்டங்களை எதிர்த்து போர்க்கொடி தூக்கி, மீன்வளத்தையும், மீனவர் நலத்தையும், பாதுகாப்போம் என்று உறுதி எடுத்துக்கொள்வோம்” என தெரிவித்திருக்கிறார்.
உலக மீன்வள நாளான இன்று, மீனவர்களுக்கு எதிராக ஒன்றிய அரசு கொண்டு வரும் சட்டங்களை எதிர்த்து போர்க்கொடி தூக்கி, மீன்வளத்தையும், மீனவர் நலத்தையும், பாதுகாப்போம் என்று உறுதி எடுத்துக்கொள்வோம்.#WorldFisheriesDay2021 pic.twitter.com/Vff87Hc292
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) November 21, 2021