புதுக்கோட்டையில் படுகொலை செய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ஆடு திருட்டை தடுக்கச் சென்ற திருச்சி மாவட்டம் நாவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க இரண்டு டிஎஸ்பிக்கள் தலைமையில் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் 2 எஸ்.ஐக்கள் உள்ளடங்கிய 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்த சிறந்த உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இரவு ரோந்துபணியில் திருடர்களை பிடித்தபோது அவர்களால்
— CMOTamilNadu (@CMOTamilnadu) November 21, 2021
தாக்கப்பட்டு உயிரிழந்த திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் உட்கோட்டம் நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்
திரு.பூமிநாதன் அவர்கள் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார் pic.twitter.com/ACnMrEWC9S