பழனி: மற்றுமொரு பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்; ஆசிரியர் கைது

பழனி அருகே செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பழனி அருகே அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தற்காலிக ஆங்கில ஆசிரியராக நாட்ராயன் (வயது 30) என்பவர் பணியாற்றி வருகிறார். ஏற்கெனவே திருமணமான இவர், அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவியிடம், தான் அச்சிறுமியை திருமணம் செய்துக்கொள்வதாக பேசிவந்திருக்கிறார்.

image

கடந்த ஓராண்டாக திருமணம் தொடர்பாக பேசி வந்த ஆசிரியர், தனது விட்டுக்கு அவ்வபோது அந்த மாணவியை அழைத்து சென்று பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கியிருந்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்ததைத்தொடர்ந்து, மாணவியின் தாயார் உடனடியாக பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியர் நாட்ராயன் மீது புகார் அளித்துள்ளார். அதைத்தொடர்ந்து போலீசார் இந்த வழக்கை, போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளார். உடனடியாக காவல்துறையினர் ஆசிரியரை கைதும் செய்துள்ளனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து நாட்ராயன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி: ”சக உயிராக பெண்ணை பார்க்கும் எண்ணம் வேண்டும்”- பாலியல் வன்கொடுமை குறித்து மு.க.ஸ்டாலின்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post