
செஞ்சி அருகே நண்பர்களுடன் தரைப்பாலத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வீராசாமி என்பவரின் மகன் கோதண்டராமன் (18) திண்டிவனம் அரசுக் கல்லூரியில் படித்து வரும் இவர், பாலப்பாடி - மேல்மலையனூர் சாலை அத்தியந்தல் கிராமத்திலுள்ள வராகநதி தரைப்பாலத்தில் நண்பர்களுடன் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். அப்போது ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.

இந்நிலையில் உடனிருந்தவர்கள் காப்பாற்ற முயற்சி செய்தும் நீரில் மாணவன் அடித்து செல்லப்பட்டதால் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து மேல்மலையனூர் தீயணைப்புத் துறையினக்கு தகவல் அளித்த பின் சம்பவ இடத்திற்கு வந்த நீயனைப்பு வீரர்கள் மாணவனின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து அவலூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News