
தமிழகத்தில் கொரோனா 3ம் அலை பாதிப்பு இல்லை என்றாலும் அதனை எதிர்கொள்ளத் தேவையான போதிய கட்டமைப்புகள் தயார் நிலையில் உள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ் நிறுவனம் ஐக்கிய பேரரசு சார்பில் லண்டனில் நடைபெற்ற சர்வதேச விழாவில், அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு மருத்துவ சிறப்பு விருது வழங்கப்பட்டது. அதில் காணொலி வாயிலாக பங்கேற்று பேசிய அவர், தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளால் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக கூறினார். 3ஆவது அலை பரவினாலும் அதனை எதிர்கொள்ள தமிழ்நாட்டில் போதிய மருத்து கட்டமைப்பு தயார் நிலையில் உள்ளதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News