15 மணி நேரமாக தொடரும் கனமழை: வெள்ளக்காடானது சென்னை

சென்னையில் நேற்று மாலை 3 மணிக்கு தொடங்கிய மழை தற்போதும் நீடிக்கிறது.
 
கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்து வரும் மழையால், சென்னையின் பல்வேறு இடங்களில் குடியுருப்புகள், தெருக்கள், சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, சென்னையில் நேற்று மாலை 3 மணிக்கு தொடங்கிய கனமழை தற்போது காலை வரை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இரவு 10 மணிக்கு மேல் பல இடங்களில் கனமழையும் சில இடங்களில் மிக கனமழையும் பெய்து வருகிறது.
image
தற்போது சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்று வீசுகிறது. நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலை முழுவதும் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இரவு பெய்த தொடர் மழையால் தி.நகர், மேற்கு மாம்பலத்தை இணைக்கும் துரைசாமி சுரங்கப் பாதையை மழை நீர் மூழ்கடித்தது. கனமழையால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post