
தொடர் மழை காரணமாக வேலூர், ராணிப்பேட்டை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நாளை (நவம்பர் 11) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக நாளை வேலூர் (நவம்பர் 11) மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
இதே போல மாணவர்களின் நலன் கருதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் நாளை (நவம்பர் 11) ஒரு நாள் மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்திலும் நாளை (நவம்பர் 11) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News