வெட்டிக் கொலை - குளித்தலையில் பரபரப்பு -murder - agitation

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கருப்பத்தூரைச் சேர்ந்த ரவுடி கோபால் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள கருப்பத்துரைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி கோபால் (53). இவருக்கு பொன்னுமணி என்ற மனைவியும், தமிழ்பொன்னி, கயல்பொன்னி என இரு மகள்களும். நரேன் கார்த்திக், நரேன் ராஜ் என்ற இரட்டை மகன்களும் உள்ளனர். அகில இந்திய தேவேந்திர குல தலைவர் பசுபதி பாண்டியனின் ஆதரவாளரான இவர் மீது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொலை வழக்குகள் உள்ளன.

image

இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டருகே உள்ள கோபாலுக்குச் சொந்தமான வயல்வெளியில் மர்ம நபர்களால் அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தகவலறிந்த லாலாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த கோபாலின் உடலை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் கொலை குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறார், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Rowdy Gopal, a resident of Karuppathur near Kulithalai in Karur district, was hacked to death by mysterious persons.

Famous Rowdy Gopal (53) hails from Karuppathurai near Kulithalai in Karur district. He is survived by his wife Ponnumani and two daughters, Tamilponni and Kayalponni. They also have twin sons, Narain Karthik and Narain Raj. He is a supporter of All India Devendra Kula leader Pashupati Pandian and is facing murder cases in various districts of Tamil Nadu.

He was hacked to death by mysterious persons in a field belonging to Gopal near his house this morning. Informed Lalapettai police went to the spot and seized the body of the deceased Gopal and sent it to Karur Government Medical College Hospital for postmortem examination.

Karur District Superintendent of Police Sundaravadivel, who arrived at the scene, is being investigated from various angles and the incident has caused a great stir in the area.

Post a Comment

Previous Post Next Post