சேலத்தில் வழிப்பறி கொள்ளையர்களை விரட்டிச் சென்று பிடித்த மாற்றுத்திறனாளி ஆட்டோ ஓட்டுநரை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் நேரில் அழைத்து பாராட்டினார்.
சேலம் அம்மாபேட்டை புறவழிச் சாலையில் கடந்த 28 ஆம் தேதி பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த ஒருவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் செல்போளை பறித்துச் செல்ல முயன்றனர். அவர் கூச்சலிடவே அருகிலிருந்த ஆட்டோ ஓட்டுனர் தங்கதுரை என்பவர் உடனடியாக விரட்டிச் சென்று இரு சக்கர வாகனத்தின் மீது ஆட்டோவை மோதி இரண்டு பேரையும் பிடித்து அம்மாபேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தார்.
மாற்றுத் திறனாளியாளி ஆட்டோ ஓட்டுநரான தங்கதுரை துணிச்சலோடு வழிப்பறி கொள்ளையர்களை விரட்டிச் சென்று பிடித்த ஆட்டோ ஓட்டுனர் தங்கதுரையை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் அவரது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பொன்னாடை போர்த்தி பாராட்டி வெகுமதி வழங்கினார். தங்கதுரை பிடித்துக் கொடுத்த இளைஞர்கள் அகமது பாஷா மற்றும் பக்தவச்சலம் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News