
அறுந்து கிடந்த உயர்அழுத்த மின் கம்பியை மிதித்த பசு மாட்டை காப்பாற்ற முயன்ற இளைஞர் மீது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்துள்ள கஸ்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி செல்வரசு (29). நேற்றிரவு பெய்ந்த கன மழையின் காரணமாக இவரது வீட்டின் அருகே அறுந்து கிடந்த உயர்அழுத்த மின் கம்பியை மிதித்த பசுமாடு மீது மின்சாரம் தாக்கியுள்ளது.

இதையடுத்து மாட்டில் அலறல் சத்தம்கேட்டு வீட்டினுள் இருந்த செல்வரசு ஓடிவந்து, மின்சாரம் தாக்கிய மாட்டை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது செல்வரசு மீதும் மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் மாடும், செல்வரசும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த களம்பூர் காவல்நிலைய போலீசார் இறந்த செல்வரசின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக. ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News