
மதுரையில் ரவுடி வரிச்சியூர் செல்வத்திடம் மாவட்ட காவல் துறையினர் நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கியுள்ளனர்.
மதுரையில் அதிரடி நடவடிக்கையின் மூலம் 235 ரவுடிகளின் குற்ற வழக்குகள் தணிக்கை செய்யப்பட்டு, 25 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். ஆயிரத்து 170 பேரிடம் நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கினர்.

இந்நிலையில் மதுரையில் வலம்வந்த வரிச்சியூர் செல்வத்திடமும் காவல் துறையினர் உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கினர். எந்தவித குற்றச் செயலிலும் ஈடுபடக்கூடாது என மேலூர் வருவாய் கோட்டாச்சியர் முன்னிலையில் உறுதிமொழி பத்திரம் எழுதி பெறப்பட்டுள்ளது. உறுதிமொழி எழுதிக் கொடுத்துவிட்டு ஓராண்டு காலத்துக்குள் குற்றத்தில் ஈடுபடுவோர் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவர் என காவல் துறையினர் எச்சரித்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
In Madurai, the district police have obtained a probation certificate from Rowdy Varicchiyoor Selvam.
In Madurai, the criminal cases of 235 rowdies were investigated and 25 people were arrested by the police. 170 people wrote and bought a certificate of probation.
In this situation, the police also bought a pledge letter from Varicchiyur Selvam who returned to Madurai. An affidavit has been obtained in the presence of the Melur Revenue Commissioner that he should not be involved in any criminal activity. Police have warned that those convicted of the crime will be jailed again within a year of writing the affidavit.
Tags:
News