
புளியந்தோப்பு கே.பி.பார்க் குடியிருப்பை கட்டிய கட்டுமான நிறுவனமான பி.எஸ்.டி. மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் கட்டிட குடியிருப்புகள் மோசமான நிலையில் கட்டப்பட்டது புதிய தலைமுறையின் கள ஆய்வில் தெரியவந்தது. புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக கட்டடிடங்களை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் உறுதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். இதையடுத்து, தரமற்ற வகையில் கட்டப்பட்ட கே.பி.பார்க் குடியிருப்பு தொடர்பாக ஐஐடி குழு ஆய்வு செய்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

இந்த அறிக்கையில், 'தரமற்ற வகையில் குடியிருப்பை கட்டிய பி.எஸ்.டி. கட்டுமான நிறுவனத்தை தடை பட்டியலில் சேர்க்கவும் ஐஐடி குழு பரிந்துரைத்துள்ளது. அரசு ஒப்பந்தங்களில் சம்பந்தபட்ட நிறுவனத்துக்கு இனி ஒப்பந்தங்கள் வழங்கக் கூடாது' என தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் இறுதி ஆய்வறிக்கையை ஐஐடி குழு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News