சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இவ்விழாவில் தலைமை உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''அரசுப் பணி என்பது இளைஞர்களால் அதிகம் விரும்பப்படும் பணியாக உள்ளது. குறிப்பாக இந்திய ஆட்சிப் பணி நாட்டில் பல இளைஞர்களின் கனவாக உள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. 'மக்களிடம் செல், அவர்களோடு வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள், அவர்கள் தருவதை பெற்றுக்கொள், அவர்களை மேம்படுத்து' என்ற பேரறிஞர் அண்ணாவின் கருத்தை உள்வாங்கி மக்கள் பணியாற்றிட வாழ்த்துகிறேன்'' என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
An appreciation ceremony was held under the chairmanship of Chief Minister MK Stalin for the students from Tamil Nadu who won the civil service examination.
Addressing the gathering, Chief Minister MK Stalin said, “Government work is one of the most sought after tasks by the youth. Indian governance in particular is the dream of many young people in the country. It is a great pleasure for a disabled student to have passed the UPSC examination. "Go to the people, live with them, learn from them, get what they give, improve them," he said.
Tags:
News