
தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வோருக்காக அரசு விரைவுப் பேருந்துகளில் இன்று முதல் முன்பதிவு தொடங்குகிறது.
தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு சொந்த ஊர் செல்வோருக்காக, அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். மேலும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஒரு மாதத்துக்கு முன் முன்பதிவு செய்யலாம். இந்த ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி வியாழனன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது.

வெள்ளியன்று விடுமுறை எடுத்தால், சனி, ஞாயிற்றுக்கிழமையுடன் மொத்தம் 4 நாள்கள் தொடர் விடுமுறையாகின்றன. இந்நிலையில், நவம்பர் 3 ஆம் தேதி அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிப்பதற்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு படுக்கை வசதி மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
TNSTC உள்ளிட்ட அரசு செயலிகளிலும், தனியார் செயலிகளிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம். சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலைய முன்பதிவு மையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News