குரல் பதிவுகளை வெளியிடும் hoote செயலி - அறிமுகம் செய்துவைத்தார் நடிகர் ரஜினிகாந்த்

அனைவரும் குரல் பதிவுகளை பதிவிடும் hoote எனும் சமூகவலைத்தள செயலியை, நடிகர் ரஜினிகாந்த் தொடக்கி வைத்தார்.
 
சவுந்தர்யா ரஜினிகாந்தின் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த செயலி, 60 விநாடி அளவு ஆடியோவை பதிவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தாதா சாகிப் பால்கே விருது பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான குரல் பதிவுடன் இந்த செயலியை அறிமுகம் செய்து வைத்தார். கிளப் ஹவுஸ், ட்விட்டர் ஸ்பேசஸ் போலல்லாமல் எவர் வேண்டுமானாலும் குரல் பதிவு செய்யும் வகையில் ஹூட் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சவுந்தர்யா ரஜினிகாந்த், அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் நிறைந்ததாகவும் இருக்கும் என கூறியுள்ளார்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post