
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே இந்திரா நகரில் உரிய அனுமதி இல்லாமல் நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டின் போது மாடுகள் முட்டியதில் 5 பேர் காயமடைந்தனர்.
அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, மற்றும் சிவகங்கை பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

வயல்வெளிகளில் அவிழ்த்து விடப்பட்ட காளைகள் முட்டியதில் 5க்கும் மேற்பட்டோர் சிறு காயமடைந்தனர். அனுமதி இல்லாமல் மஞ்சுவிரட்டு நடத்தியதாக கல்லலை சேர்ந்த 5 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News