
500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு பிஜிஆர் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில் தன்னிடம் சில ஆடுகள் மட்டும்தான் இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.
அவதூறு கருத்து பரப்பியதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பிஜிஆர் நிறுவனம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் 10 நாட்களில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டுமெனவும், 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் அந்த நோட்டீசில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதில் அளித்து ட்வீட் செய்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தான் ஒரு சாதாரண விவசாயி, தன்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டும்தான் என கூறியுள்ளார். அமைச்சர்களைப் போல ஊழல் செய்து கொடுப்பதற்கு எதுவும் இல்லை என்றும் நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இருக்கிறது சந்திப்போம் எனவும் அண்ணாலை தெரிவித்துள்ளார். அண்மையில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக முறைகேடு புகார்களை முன்வைத்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பிஜிஆர் நிறுவனத்திற்கு மின்வாரியம் சலுகைகளை வழங்கி உள்ளதாகவும் குற்றச்சாட்டியிருந்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News