
சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகள் ஜாலியாக சண்டையிட்டன.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. வனப்பகுதியில் வசிக்கும் காட்டு யானைகள் வனப்பகுதி வழியாக தமிழகம் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நடமாடுகின்றன.

இந்நிலையில் இன்று அதிகாலை சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் அருகே தமிழக கர்நாடக எல்லையில், சாலைக்கு வந்த இரண்டு காட்டு யானைகள் தனது குட்டியுடன் வாகனங்களை வழிமறித்து நின்றபடி ஜாலியாக தும்பிக்கையால் சண்டையிட்டபடி சுமார் அரை மணி நேரம் சாலையில் விளையாடின. இதை வாகன ஓட்டிகள் கண்டு ரசித்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News