மக்களின் அன்பினாலும், ஆதரவினாலும் இது சாத்தியமானது - நடிகர் ரஜினி

எனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள்‌ நடைபெற இருக்கிறது என்று நடிகர் ரஜினி காந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை பதிவிட்டுள்ள அவர், ''எனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள்‌ நடைபெற இருக்கிறது. ஒன்று, மக்களின்‌ அன்பினாலும்‌, ஆதரவினாலும்‌ திரையுலகின்‌ உயர்ந்த விருதான தாதா சாஹேப்‌ பால்கே விருதினை மத்திய அரசு எனக்கு வழங்கவுள்ளது.

image

இரண்டாவது, என்னுடைய மகள்‌ செளந்தர்யா விசாகன்‌, அவருடைய சொந்த முயற்சியில்‌ மக்களுக்கு மிகவும்‌ பயன்படக்கூடிய 'HOOTE'என்‌கிற APP-ஐ உருவாக்‌கி அதை அறிமுகப்படுத்தவுள்ளார்‌. அதில்‌ மக்கள்‌ தாங்கள்‌ மற்றவர்களுக்கு எழுத்து மூலம்‌ தெரிவிக்க விரும்பும்‌ கருத்துகளையும்‌, விஷயங்களையும்‌, இனி அவர்களது குரலிலேயே எந்த மொழியிலும்‌ HOOTE APP மூலமாக பதிவிடலாம்‌. இந்த வரவேற்கத்தக்க புதிய முயற்சியான HOOTE APP-ஐ என்‌ குரலில்‌ பதிவிட்டு துவங்க உள்ளேன்‌''

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post