கனமழையால் ஒழுகும் பேருந்துகள்... இருக்கைகள் இருந்தும் நின்றபடி செல்லும் பயணிகள்

கனமழையால் அரசு பேருந்தில் மழைநீர் வடிந்ததால், பேருந்தில் போதிய இருக்கைகள் இருந்தும் பயணிகள் நின்ற நிலையில் பயணம் செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து சங்கரன்கோவிலுக்கு சென்ற அரசு பேருந்தில் மழையின் காரணமாக பேருந்து முழுவதும் மழைநீர் வடிந்துள்ளது. இதனால் பேருந்தில் போதிய இருக்கைகள் இருந்தும், மழையால் அனைத்து இருக்கைகளும் ஈரமானதால் பயணிகள் நின்றபடியே பயணம் செய்துள்ளனர். மேலும், நின்றபடியே பயணம் செய்தாலும் பெரும்பாலான பயணிகள் மழையில் நனைந்தபடியே சென்றுள்ளனர்.

image

image

இதனால் வயதானவர்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருவதாகவும், போக்குவரத்து நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி இதுபோன்ற மழைக்காலங்களில் ஒழுகும் அரசு பேருந்துகளை கண்காணித்து அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பயணிகளின் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஆவின் இனிப்புக்கு வரவேற்பு - 26 நாட்களில் ரூ.22 கோடிக்கு இனிப்புகள் விற்பனை 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post