மீனவர் உயிரிழப்பு: மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இலங்கை கடற்படை படகு மோதி மீனவர் உயிரிழந்த விவகாரத்தில் இலங்கை அரசை கண்டிக்காத மத்திய மாநில அரசை கண்டித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 18ம் தேதி கோட்டைப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற படகு மீது, இலங்கை கடற்படை விசைப்படகு மோதிய விபத்தில் ராஜ்கிரன் என்ற மீனவர் உயிரிழந்தார். இதைக் கண்டித்து ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தங்கச்சிமடம் வலசை பேருந்து நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

image

அப்போது இலங்கை அரசை கண்டித்தும், இந்திய மீனவர்கள் தொடர்ந்து படுகொலை செய்து வரும் இலங்கை அரசை கண்டிக்காமலும், கண்டுகொள்ளாமலும், இருந்து வருவதாக கூறி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதேபோல் படுகொலை செய்யப்பட்ட மீனவர் குடும்பத்திற்கு தகுந்த இழப்பீடு வழங்கி அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதோடு, கடலில் மீன் பிடித்து வரும் மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post