
ஆளுநர் வரம்பை மீறினால் முதலமைச்சர் ஸ்டாலின் பயப்படமாட்டார் என தமிழ்நாடு மாநில சிறுபான்மை நலவாரியத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஒவ்வொரு துறை அதிகாரிகளின் தகவலையும் கேட்டிருப்பது என்பது ஏற்க முடியாது. ஆளுநரின் அதிகாரத்தை தமிழக முதல்வர் மதிக்கத் தயாராக இருக்கிறார். ஆனால் மத்திய அரசு ஆளுநர் மூலம் வரம்பு மீறி செயல்பட்டால் ஏற்க முடியாது. ஆளுநர் பதவி என்பது தீயணைப்பு வாகனம் போன்றது. நெருப்பு இருந்தால் மட்டுமே வந்து அணைக்க வேண்டும். ஆளுநர் வரம்பை மீறினால் முதல்வர் பயப்படமாட்டார். சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆட்சி அதிகாரத்தில் தலையிடுவது மக்களிடையே இரட்டை ஆட்சி நடக்கின்றது என்ற குழப்பத்தை ஏற்படுத்தும். தமிழக அரசு நன்றாகத் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அரசாக இருக்கிறது. இந்நிலையில் ஆளுநரின் ஆளுநரின் தலையீடு தேவையற்றது. இந்த அரசை திசை திருப்பும் போக்காக இருந்து விடக்கூடாது. மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கக் கூடிய தேர்வை ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே நடத்தப்படும் என கூறுவது இந்தி பேசாத மாநில மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்துவது போல் உள்ளது”என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News