Chance of heavy rain in 7 districts
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கும்போது, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மிக கனமழையும், நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில் கனமழையும் பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
Tags:
weather report