
வண்டலூர் பூங்காவில் வயது முதிர்வின் காரணமாக பெண் சிங்கம் உயிரிழந்த நிலையில், 5 நெருப்புக் கோழியும் உயிரிழந்துள்ளதாக பூங்கா நிர்வாகம் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
சென்னையை அடுத்துள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடந்த 26ம் தேதி, வயது முதிர்வின் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த கவிதா என்ற 19 வயது பெண் சிங்கம் உயிரிழந்துள்ளது. அதே போல் நேற்று 5 நெருப்பு கோழிகளும் உயிரிழந்துள்ளது. 5 நெருப்புக் கோழிகளும் ஒரே நாளில் உயிரிழந்துள்ளதால், இறப்பிற்கான காரணம் அறிய பூங்கா நிர்வாகம் பிரேத பரிசோதனை மேற்கொண்டது.

இதில், வைரஸ், பாக்டீரியா மற்றும் நச்சுயியல் ஆய்விற்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைகள் செய்யபபட்டன. இரத்த மாதிரிகள் மற்றும் உடல் உறுப்புகள் ஆய்வின்போது கோழி காலரா நெருப்பு கோழிகளுக்கு இல்லை என்பது அறியப்பட்டது. மீதமுள்ள நெருப்புக் கோழிகளை பூங்கா நிர்வாக மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News