
சென்னையில் இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 6 மணி வரை 5 இடங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு நெடுஞ்சாலைத் துறையால் ஈவேரா பெரியார் நெடுஞ்சாலையில் பெருநகர சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அருகில் சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இந்த பணிகள் இன்று (வியாழக்கிழமை) இரவு 8 மணி முதல் நாளை காலை 6 மணி வரை நடைபெறும். அதனால் சென்னையில் வேப்பேரி, பெரியமேடு, பார்க் டவுன், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் எழும்பூர் ஆகிய 5 பகுதிகளில் மட்டும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவசர தேவைக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ள 8144930905 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Drinking water supply will be suspended at 5 places in Chennai from 8 pm tonight to 6 am tomorrow.
Due to the northeast monsoon, the Highways Department is to construct a storm water drain across the road near the Metropolitan Police Commissioner's Office on the Evara Periyar Highway. These missions will take place today (Thursday) from 8pm to 6am tomorrow. Therefore, it has been announced that drinking water supply will be suspended in only 5 areas in Chennai namely Vepery, Periyamedu, Park Town, Chintadripet and Egmore.
image
The public is advised to store drinking water as a precautionary measure. You can also call 8144930905 to get drinking water by lorries for emergencies.
Tags:
News