5 பேர் பணியிடை நீக்கம் -Dismissal of 5 persons

மதுரையில் டாஸ்மாக் எலைட் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த மேலாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அருண்சத்யா, மதுரை தெற்கு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காளவாசல் பகுதியில் செயல்படும் எலைட் மதுபான கடையில், அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக 200 ரூபாய்க்கு மது விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், கடைக்கு சம்பந்தமில்லாத நபர்கள் பணிக்கு அமர்த்தியதும் தெரியவந்தது.

image

இதையடுத்து, கடையின் மேற்பார்வையாளர் ராஜா, விற்பனையாளர்கள் வேல்பாண்டி, இளமாறன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதே போன்று, எல்லீஸ் நகரில் செயல்படும் மதுபான கடையின் மேற்பார்வையாளர், விற்பனையாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருமங்கலம் மதுபான கடையில், விற்பனை தொடங்காத நிலையில் கையிருப்பில் இருந்த 59 ஆயிரத்து 880 ரூபாய் குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக அதிகாரி அருண் சத்யா தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Managers and sellers who sold liquor at extra cost at Tasmac Elite stores in Madurai have been sacked.

Arunsathya, Senior Regional Manager, Tasmac, inspected the southern part of Madurai. At that time, it was revealed that the Elite liquor store operating in the Kalavasal area was selling liquor for 200 rupees more than the price fixed by the government. It was also revealed that the shop had hired people who were not related to the shop.

Following this, the store supervisor Raja ordered the dismissal of vendors Velpandi and Ilamaran. Similarly, the supervisor and salesman of a liquor store operating in Ellis have been fired. Officer Arun Satya said that an explanation has been sought regarding the 59 thousand 880 rupees that was in stock at the Thirumangalam liquor store before the sale started.

Post a Comment

Previous Post Next Post