
ராசிபுரத்தை அடுத்துள்ள புதுசத்திரம் அரசுப் பள்ளியில் பார்வையற்ற ஆசிரியர் முன் நடனமாடிய 3 மாணவர்களின் வீடியே வைரலான நிலையில், அவர்கள் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த இரு தினங்களுக்கு முன், 9ம் வகுப்பில், ஆசிரியர் பன்னீர்செல்வம் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது பாடத்தை கவனிக்காமல் இரண்டு மாணவர்கள் சினிமா பாடலுக்கு நடனமாடினார்கள். இதை வேடிக்கை பார்த்த சக மாணவர்களில் ஒருவர் செல்போனில் பதிவுசெய்து வாட்ஸ் அப் குரூப்களில் பதிவிட்டார். இந்த வீடியோ கடந்த இரண்டு நாட்களாக வைரலாகி வந்தது.

இந்நிலையில், மாணவர்களின் ஒழுங்கீனமான செயல்கள் வீடியோவாக வெளிவந்ததால் இது குறித்து பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் கூட்டத்தை கூட்டி விவாதித்த தலைமை ஆசிரியர் குணசேகரன், ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட 3 மாணவர்களை பள்ளியில் இருந்து நீக்கியதோடு மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து டிசியை (மாற்றுச் சான்றிதழை) வழங்கினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News