
தூத்துக்குடியில் இளைஞர்களின் மத்தியில் உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தி 70 கிலோ எடையை 6 மணிநேரம் தொடர்ச்சியாக 10,699 தூக்கி சாதனை படைத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தியும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தூத்துக்குடி மாவட்டத்தில் முதன்முறையாக பெஞ்ச் பிரஸ் பிரிவில் 70 கிலோ எடையை தொடர்ச்சியாக ஆறு மணி நேரம் 20 பேர் குழுவாக சேர்ந்து யூனிகோ வோல்ட் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.


இந்த சாதனை முயற்சியில் 20 பேர் கலந்து கொண்டு மொத்தம் 10 ஆயிரத்து 699 முறை ஏற்றி, இறக்கி சராசரியாக ஓருவர் 600 முறை பெஞ்ச் பிரஸ் செய்து சாதனை நிகழ்த்தப்ட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சாதனை படைத்த வீரர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News