
பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டிய நபர்களிடம் இருந்து சென்னை மாநகராட்சி ரூ. 26 லட்சம் அபராதம் வசூல் செய்துள்ளது.
சென்னையில் 15 மண்டலங்கள் வாரியாக இதுவரை பொது இடங்களில் குப்பைகள் கொட்டியதற்காக ரூ.13,63,500 மாநகராட்சி அபராதம் விதித்துள்ளது. அதே போல, கட்டட கழிவுகள் கொட்டியதற்காக ரூ.12,74,500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் மட்டும் பொது இடத்தில் குப்பை கொட்டியவர்களிடம் இருந்து ரூ. 92,500, கட்டட கழிவுகள் கொட்டப்பட்டதற்கு 70 ஆயிரம் ரூபாயும் சென்னை மாநகராட்சி அபராதம் விதித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News