ஜிஎஸ்டி கவுன்சிலின் -GST Council

ஜிஎஸ்டி கவுன்சில் அமைப்பின் சீர்திருத்தக் குழுவில் தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி கவுன்சிலின் சீர்திருத்தக் குழுவில் மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

டெல்லி மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ஹரியானா மாநில துணை முதல்வர் துஷ்யந்த சவுதாலா, அசாம் மாநில நிதியமைச்சர் அஜிதிங் நியோங், சத்தீஸ்கர் மாநில வர்த்தக அமைச்சர் டி.எஸ்.சிங் ஆகியோர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். 

மேலும், ஒடிசா மாநில நிதி அமைச்சர் நிரஞ்சன் பூஜாரி, தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tamil Nadu is not a freebie state - The Week

தகவல் தொழில்நுட்ப ரீதியில் ஜிஎஸ்டி வரி வசூலில் உள்ள சிக்கல்களை சரி செய்வது தொடர்பாகவும், மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான நிதிப்பகிர்வில் இருக்கக்கூடிய சிக்கல்களை சீர் செய்வதற்கும் இந்தக் குழு முயற்சிகளை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்தக் குழுவில் தாம் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Tamil Nadu Finance Minister PDR Palanivel Thiagarajan has been included in the GST Council reform committee.

According to a press release issued by the Union Finance Ministry, Maharashtra Deputy Chief Minister Ajit Pawar has been appointed as the Chairman of the newly constituted GST Council Reform Committee.

Delhi Deputy Chief Minister Manish Sisodia, Haryana Deputy Chief Minister Dushyant Chaudhary, Assam Finance Minister Ajit Nyong and Chhattisgarh Commerce Minister DS Singh have been added as members.

Also, Orissa Finance Minister Niranjan Poojary and Tamil Nadu Finance Minister PDR Palanivel Thiagarajan have been appointed as members.

Post a Comment

Previous Post Next Post