
காவிரி நதிநீர் விவகாரத்தில் பிரச்னையே இல்லை, தமிழகமும், கர்நாடகமும் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்க வேண்டும் என மதுரையில் கர்நாடகா அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.
கர்நாடகா மாநில முன்னாள் துணை முதல்வரும், தற்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சருமான ஈஸ்வரப்பா மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசும்போது...

கர்நாடகாவுக்கும் - தமிழ்நாட்டுக்கும் இடையே எந்தவொரு பிரச்னையும் இல்லை, கர்நாடக மக்களும் - தமிழக மக்களும் சகோதர, சகோதரிகளாக உள்ளனர், காவிரி விவகாரத்தில் அரசியல்வாதிகளால் அரசியல் செய்யப்படுகிறது, காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பை இருவரும் கடைபிடிக்க வேண்டும்,
காவிரி பிரச்னையை அரசியல் பிரச்னையாக மாற்றப்பட்டுள்ளது, சில நபர்கள் காவிரி விவகாரத்தில் வேண்டுமென்றே பிரச்னையை உருவாக்குகின்றனர், காவிரி நதிநீர் விவகாரத்தில் பிரச்னையே இல்லை, தமிழகமும், கர்நாடகமும் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்க வேண்டும், காவிரி தூய்மையாக உள்ளது, காவிரி தமிழக விவசாயிகளையும், கர்நாடக விவசாயிகளையும் ஆசீர்வதிக்கும்' என கூறினார், மேகதாது அணை குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் புறப்பட்டுச் சென்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News