ரோஹித் சர்மா, விராட் கோலி இடத்தை நிரப்புவது கடினம்: சொல்கிறார் புதிய கேப்டன் ஷுப்மன் கில்

மும்பை: ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணி, இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு 5 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாட உள்​ளது. இதற்​காக இந்​திய அணி இன்று இங்​கிலாந்து புறப்​பட்​டுச் செல்​கிறது. இதையொட்டி மும்​பை​யில் நேற்று கேப்​டன் ஷுப்​மன் கில்​லும், பயிற்​சி​யாளர் கவுதம் கம்​பீரும் பத்​திரி​கை​யாளர்​களை சந்​தித்​தனர். அப்​போது ஷுப்​மன் கில் கூறிய​தாவது:

நான் கேப்​ட​னாக நியமிக்​கப்​பட்​ட​போது மிக​வும் மகிழ்ச்​சி​யடைந்​தேன். பேட்​டிங் வரிசையை நாங்​கள் இன்​னும் முடிவு செய்​ய​வில்​லை. எங்​கள் திட்​டங்​களை வகுக்க 10 நாட்​கள் உள்​ளன. இங்​கிலாந்​தில் 10 நாட்​கள் பயிற்சி முகாமில் கலந்து கொள்​கிறோம். இதனுடன் நடை​பெறும் பயிற்சி ஆட்​டத்​துக்கு பின்​னரே டெஸ்ட் போட்​டிக்​கான பேட்​டிங் வரிசையை முடிவு செய்​வோம்.


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post