மதுரையில் கையில் அருவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் இளைஞரின் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாநகர் அண்ணாநகர் வெக்காளி அம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள பெரியார் வீதி பகுதியில் இளைஞர் ஒருவர் மது அருந்திவிட்டு கையில் ஆயுதங்களுடன் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு வந்தது. இந்நிலையில், நேற்றும் அதே பகுதியில் மதுபோதையில் வந்த இளைஞர் கையில் நீண்ட அருவாளுடன் அந்த வழியாக சென்று கொண்டிருந்த பொதுமக்களை மிரட்டியது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அந்த பகுதியில் சைக்கிளில் சென்ற முதியவர் ஒருவரை அருவாளை காட்டி ஆபாச வார்த்தைகளை பேசியபடி அந்த இளைஞர் மிரட்டுவது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. இது குறித்து அண்ணாநகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாநகரில் சில நாட்களாக கையில் ஆயுதங்களோடு சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தும் வகையில் அலைந்து திரிவதாக காவல்துறையினர் கைது செய்த நிலையில், தொடர்ச்சியாக இளைஞர்கள் கையில் ஆயுதங்களோடு பொதுமக்களை மிரட்டும் சம்பவங்களும் அதிகரித்துள்ளதை இந்த வீடியோ வெளிப்படுத்தியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News