"ஆன்மிக புரட்சியை ஏற்படுத்தும் அரசு இது" - அமைச்சர் சேகர்பாபு

ஆன்மிக புரட்சியை ஏற்படுத்தும் அரசு இது... குற்றம் சாட்டுபவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டிக்கொண்டு தான் இருப்பார்கள் என அமைச்சர் சேகர்பாபு பேட்டியளித்தார்.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பட்டீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சிவராத்திரிக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாமி தரிசனத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், பேரூர் கோவிலில் மகா சிவராத்திரி விழாவை தொடங்கி வைத்துள்ளேன். பட்டிமன்றம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது கூட்ட நெரிசலை தடுக்கவும், பக்தர்கள் அதிக நேரம் காத்திருக்காமல் தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

image

போற்றுவார் போற்றட்டும் புழுதிவாரி தூற்றுவோர் தூற்றிவிட்டு போகட்டும் அவர்கள் எங்களை தூற்றத் தூற்ற அதிவேகமாக மக்கள் நலனில் அக்கறை கொண்டு இன்னும் மக்கள் பணியை சிறப்பாக செய்வோம். குறுகிய காலத்தில் 500 திருக்கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது .பழனி போன்ற கோவில்களில் கும்பாபிஷேக பணி. மற்றும் ஆயிரம் கோடி செலவில் 1500 திருக்கோவில்கள் திருப்பணி தொடங்கப்பட்டுள்து. 12,597 கோயில்களுக்கு கூடுதலாக வைப்பு நிதியை ஒரு லட்சமாக உயர்த்தி 2000 திருக்கோவில்களுக்கு 40 கோடி அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவில்களுக்கு 100 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

image

காசிக்கு, வள்ளலார் 200 என நிதி ஒதுக்கிய அரசு இது. கடந்த ஐந்து ஆண்டில் கிராமப்புற திருக்கோயில்கள் ஆதிதிராவிடர் வசிக்கும் திருக்கோயில்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் என இருந்த திருப்பணி நிதியை இரண்டு லட்சம் ரூபாயாக இந்த அரசு ஒதுக்கி உள்ளது. 2500 திருக்கோயில்களுக்கு 50 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஆன்மிகத்தில், ஆன்மிகவாதிகள் திருக்கோயில்கள் என அனைத்து நிலைகளிலும் நல்ல நிலையில் இருப்பதற்கு முயற்சி செய்யும் முதல்வர் என்பதால் ஆன்மிக புரட்சியை செய்யும் அரசு என்பதை இந்து சமய அறநிலைத் துறை சொல்லி வருகிறது என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post