மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மீன் வாங்க குவிந்த மக்கள்!

மாட்டுப் பொங்கலையொட்டி மீன், இறைச்சி உள்ளிட்டவற்றை வைத்து படைத்து வழிபடுவது வழக்கம். இதனால் மீன் மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.

வங்கக் கடலில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் மழை, வெள்ளம், புயல் என தொடர்ந்து இருக்கும். இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல மாட்டார்கள். மழை, வெள்ளம், பனி இக்காலகட்டம் முடிந்து தை பிறந்ததும் மாட்டுப் பொங்கல் தினத்தில் அதிகளவு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவார்கள். மாட்டுப் பொங்கல் தினத்தில் கடல் உணவை வைத்து படைப்பது வழக்கமாக இருப்பதால் மாட்டுப் பொங்கல் தினமான இன்று மீன் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

image

ஒவ்வொரு ஆண்டும் இதுபோல் தை பிறந்த மறுநாள் மீன் வாங்க கூட்டம் அலைமோதும். இது ஆண்டின் முதல் நாளாக மகிழ்ச்சியானதாக மீனவர்கள் மத்தியில் இருக்கிறது. இந்நிலையில் இன்று வஞ்சிரம் ரூ.750, சங்கரா ரூ.300, நெத்திலி ரூ.200, வால மீன் கிலோ ரூ.70, கானாங்கெளுத்தி  ரூ.200, இறால் ரூ.150 தொடங்கி 500 ரூபாய் வரை விலை போனது. ஆனாலும் விலையை பற்றி கவலைப்படாமல் மக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர். சிறு வியாபாரிகளும் பல மாவட்டங்களில் இருந்து இங்கே குவிந்ததால் கூட்டம் அலை மோதியது.

Post a Comment

Previous Post Next Post