முன் அனுமதி சீட்டு இல்லாமல் வரும் காளைகள் வாகன சோதனை சாவடியில் வைத்து திருப்பி அனுப்பப்படும் எனத் தெரிவித்துள்ளது காவல்துறை.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு காளைகளை கொண்டு வர பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட உரிய தகுதி சான்றும், பங்குபெறும் காளைகளுக்கு அங்கீகரிக்கபட்ட உரிய மருத்துவரிடம் பெறப்பட்ட தகுதி சான்றும் கொண்டு வருதல் அவசியம். அவ்வாறு தகுதிச் சான்று இல்லாமல் வாகனங்களோ அல்லது காளைகளோ வரும் பட்சத்தில் சோதனை சாவடியிலிருந்து திருப்பி அனுப்பப்படும்.
கடந்த வருடம் டோக்கன் நம்பர் வரிசைப்படி அனுப்பியதால் அதிகப்படியான எண்ணிக்கையில் ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. அதேபோல் இந்த வருடமும் டோக்கன் நம்பர் வரிசைப்படி மட்டுமே காளைகள் அவிழ்த்து விடப்படும். ஜல்லிக்கட்டு காளைகளை கொண்டு வருபவர்கள் விதிகளை மீறி இடையில் காளைகளை சேர்த்தாலோ அல்லது தடுப்புகளை சேதப்படுத்தினாலோ அவர்கள் மீது சட்டபடியான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜல்லிக்கட்டு காளையை மாடுகள் கூடும் இடத்தில் இருந்து வாடிவாசலுக்கு அழைத்து செல்ல 2 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். போலியாக டோக்கன்கள் தயாரித்து முறைகேடான வகையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு கொண்டு வரும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை
மேற்கொள்ளப்படும். ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் பகுதிகளில் காளைகளை
சிசிடிவி கேமராக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது என்பதை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News