ரேஸ்பைக் வாங்கிக் கொடுக்காததால் கல்லூரி மணவன் தூக்கிட்டு தற்கொலை.

குளச்சல் அருகே பெற்றோர் ரேஸ்பைக் வாங்கிக் கொடுக்காததால் கல்லூரி மணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை அடுத்த குறும்பனை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் அஜேஷ்குமார் (18), இவர், திருச்சியில் உள்ள கலைக்கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது விடுமுறையில் வந்துள்ள அஜேஷ்குமார் நேற்றிரவு நண்பர்களுடன் சேர்ந்து உலகக் கோப்பை கால்பந்து போட்டியை அந்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த திரையில் கண்டு ரசித்து அதிகாலை வீடு திரும்பியுள்ளார்.

image

இந்நிலையில் வீட்டின் அறையில் படுக்கச் சென்ற அவர், காலையில் பெற்றோர் அழைத்தும் வெளியே வராததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர் அப்போது அவர் மின் விசிறியில்; தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற குளச்சல் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

வுpசாரணையில், ஏற்கனவே பைக் வைத்திருக்கும் அஜேஷ்குமார் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனது பெற்றோரிடம் புதிய ரேஸ் பைக் வாங்கிக் கேட்டுள்ளார். பெற்றோர் வாங்கிக் கொடுக்கததால் அவர்களுடன் தகறாரில் ஈடுபட்டு வந்ததாகவும் அந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்டுள்ளதும் தெரியவந்தது.

image

இதனையடுத்து தற்கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், அஜேஷ்குமார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Post a Comment

Previous Post Next Post