இந்திய அணிக்கு இப்போதைய தேவை உலகக்கோப்பை'' என்கிறார் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரஷீத் லத்தீஃப்.

 India needs now is the World Cup

''விராட் கோலி 100 அல்ல, 200 சதங்களை எட்டினாலும் பரவாயில்லை. இந்திய அணிக்கு இப்போதைய தேவை உலகக்கோப்பை'' என்கிறார் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரஷீத் லத்தீஃப்.

இந்தியா - வங்கதேசம் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சதமடித்து அசத்தினார். 85 பந்துகளில் 103 ரன்கள் விளாசி 1,214 நாட்களுக்கு பிறகு ஒருநாள் போட்டியில் தனது 44வது சதத்தை பதிவு செய்தார். கடைசியாக 2019 ஆகஸ்ட் 14ம் தேதி மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக விராட் கோலி சதமடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதமடித்தவர்களின் பட்டியலில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங்கை (71 சதம்) பின்னுக்குத் தள்ளி 2வது இடம் பிடித்தார் விராட் கோலி. இந்திய முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் 100 சதத்துடன் முதல் இடத்தில் உள்ளார். இதனால் சச்சினின் இந்த சாதனையை விராட் கோலி முறியடிப்பாரா என்கிற விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

former Pakistan captain Rashid Latif.

இந்நிலையில், ''விராட் கோலி 100 அல்ல, 200 சதங்கள் வேண்டுமானாலும் அடிக்கட்டும். ஆனால் இந்திய அணிக்கு இப்போதைய தேவை ஐசிசி பட்டம் தான்'' எனக் கூறியுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீஃப். தனது யூடியூப் சேனலில் பேசிய அவர், ''சதங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட இது நேரமில்லை. இந்திய அணியினர் சாம்பியன் பட்டம் வென்றாக வேண்டும். இந்தியா கோப்பையை வென்று பல வருடங்கள் ஆகிறது.

India needs now is the World Cupகோலி 100 சதங்கள் என்ன, 200 சதங்கள் வேண்டுமானாலும் அடிக்கட்டும். அது அவரது விருப்பம். ஆனால் இந்திய அணிக்கும், ரசிகர்களுக்கும் சாம்பியன் பட்டம்தான் என்பதை அவர்கள் உணர வேண்டும். இந்திய அணியிடம் நிறைய பணம் இருக்கிறது. ஆனால் அவர்கள் சமீப காலமாக குறிப்பிடத்தக்க சாதனையை படைக்க முடியாமல் திணறி வருகின்றனர். ஆசியக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, 2019 உலகக் கோப்பை,  மேலும் கடந்த இரு டி20 உலகக்கோப்பை தொடர்கள் எதிலும் இந்திய அணி பட்டம் வெல்ல வில்லை. 100 சதம் என்ற சாதனை கோலிக்கு மட்டுமே சொந்தமானது. ஆனால் இந்திய அணிக்கு தற்போது சாம்பியன் பட்டம் தேவை'' என்று  கூறினார்.

Post a Comment

Previous Post Next Post