இளம்பெண்னை பின்தொடர்ந்து லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞரை சரமாரியாக தாக்கிய சம்பவம்

gave love torcher

இளம்பெண்னை பின்தொடர்ந்து லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞரை பெண்ணின் தம்பி உள்ளிட்ட மூவர் சரமாரியாக தாக்கிய சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

ஆவடி அடுத்த வீராபுரம் புதிய கன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர், ஆவடி மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் துணிக்கடையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இதே கடையில் பணியாற்றி வரும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (20) என்பவர் இளம்பெண்ணை காதலிப்பதாகக் கூறி பலமுறை பின் தொடர்ந்து லவ் டார்ச்சர் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

prison locked

இதை துணிக்கடை மேலாளரிடம் இளம்பெண் தெரிவித்ததால் மணிகண்டனை ஆறு மாதங்களுக்கு முன்பு வேலையிலிருந்து நிறுத்திவிட்டார். இந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி இரவு இளம்பெண் ஆவடி பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டுடிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மணிகண்டன், மீண்டும் லவ் டார்ச்சர் கொடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் உடனே தனது 17 வயது தம்பியை தொடர்பு கொண்டு ஆவடிக்கு வரும்படி கூறியுள்ளார். இதையடுத்து கன்னியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் சாலமன், கருப்புசாமி ஆகிய இருவரை அழைத்துக் கொண்ட வந்த பெண்ணின் தம்பி, மணிகண்டனை பார்த்து உன்னிடம் தனியாக பேச வேண்டும் எனக் கூறி அழைத்து சென்று தாக்கியதோடு கத்தியால் மார்பு பகுதியில் குத்திவிட்டு தப்பியோடினர்.

prison locked

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் மணிகண்டனை மீட்டு ஆவடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக புகாரின் அடிப்படையில் ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் கருப்புசாமி மற்றும் சாலமனை கைது செய்து விசாரணை நடத்திய போலீசார், பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதைத் தொடர்ந்து தலைமறைவாக உள்ள இளம பெண்ணின் தம்பியை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Post a Comment

Previous Post Next Post